28.04.11 திமுக சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல் பாதுகாப்பதுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழலுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை கூடிய திமுக உயர்நிலைக் குழு செயல் திட்டக் குழு கூட்டம் வழக்கத்தைவிட அமைதியாகவே முடிந்தது. துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டாலும் யாரும் அதிகம் பேசவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கனிமொழியை ஆதரித்துப் பேசினார். 2ஜி அலைக்கற்றை வழக்கு குற்றச்சாட்டிலிருந்து கனிமொழியைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் உடைந்த குரலில் எடுத்துக் கூறினார்.
"இன்றைக்கு கனிமொயை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையில்தான் பார்க்கிறேனே தவிர கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.
நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தன்னார்வ அமைப்புக்களின் துணையுடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அந்தப் பகுதி அமைச்சர்களோடும் மாவட்ட ஆட்சியர்களோடும் தொழில் நிறுவனங்களோடும் இணைந்து 9-க்கும் மேற்பட்ட நகரங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி 1 லட்சத்து 34 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்துள்ளார். மேலும் 55 ஆயிரத்து 656 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எனவே கனிமொழி, கருணாநிதியின் மகள் என்ற முறையில் மட்டும் இந்த இயக்கத்தில் பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளதோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப் போனால் நாட்டுப் புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும் புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.
இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக பொறுத்துக் கொள்ள முடியாமல் சகித்து கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
கனிமொழி தயக்கம்: இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்பட கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலேயே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்து வந்தேன். அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல- கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல் பாதுகாப்பதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்றபாடு எனக்குத்தான் தெரியும். நான் மூன்று நாள்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களைப் பெரிதுபடுத்தி நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கருணாநிதி பேசினார்

No comments:
Post a Comment