Saturday, 30 April 2011

அழகிரி விவகாரம் மேலூர் தாசில்தார் சஸ்பெண்ட்

சர்ச்சையில் சிக்கிய மேலூர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்




  மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிராகப் புகார் செய்து பின்னர் அதை மாற்றிக்கூறிய மேலூர் வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகேயுள்ள அம்பலகாரன் பட்டிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பிஎம்.மன்னன் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை தேர்தல் விடியோகிராபர் கண்ணன் பதிவு செய்ய முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. அப்போது மேலூர் தொகுதி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான காளிமுத்துவும் அங்கு இருந்தார்.
விடியோவில் பதிவு செய்ததைக் கண்டித்த திமுகவினர் வட்டாட்சியரைத் தாக்கியதாக கூறப்பட்டது. இதன் பிறகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன்னைத் திட்டியதாகவும் அவருடன் வந்த பி.எம்.மன்னன், ரகுபதி, திருஞானம் ஆகியோர் தன்னைத் தாக்கியதாகவும் கீழவளவு காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் செய்தார்.
ஆனால் பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டார். போலீஸார் வலியுறுத்தியதால் மு.க.அழகிரி மீது புகார் செய்ததாக அவர் தெரிவித்தார். ஆனாலும் அவரது புகாரின் படி தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.
அதே சமயம் நில எடுப்பு தாசில்தாராக காளிமுத்து பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் காளிமுத்துவை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்



தேர்தல் ஆணையத்திற்கு எப்படி செக் வைப்பது?

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011



தேர்தல் ஆணையத்திற்கு எப்படி செக் வைப்பது?







தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைள் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ள நிலையில், அறிவாலயத்தில் அவசரக்கூட்டம் கூடுகிறது.

கலைஞர்: ஆளுங்கட்சியை எதிர்க்கட்சியாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது எனச்சொல்லமாட்டேன். தேர்தல் ஆணையம் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தேர்தல் ஆணையத்தினை குறைசொல்ல மாட்டேன்.

துரைமுருகன்: என்ன தலைவரே! கஜினி சூர்யா மாதிரி பேசுறிங்க! இப்ப நாம தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை எதிர்க்கிறோமா, இல்லையான்னு சொல்லுங்க தலைவரே .  . .

அன்பழகன்: மாநில சுயாட்சி முழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டதால், மத்தியஅரசை நம்பிக்கிடக்க வேண்டியுள்ளது. இப்போது தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் தான் தூண்டிவிடுகிறதோ என்ற அச்சம் சில நாட்களாக இருக்கிறது.


கனிமொழி: திமுக கொள்கையை திஹாரில் விட்டு ரொம்பநாளாச்சுன்னு  காங்கிரஸ்கட்சிக்காரங்க கூட சொல்றாங்க. திமுககொள்கையை மறந்த மாதிரி ஆ.ராசாவையும் மறந்துடுச்சுன்னு டில்லியில் உள்ள பிரஸ் நண்பர்கள் சொல்றாங்க.

துரைமுருகன்: கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையே மறந்துட்டோம். கொள்கையை எப்படி ஞாபகத்தில் வைச்சுருக்க முடியும்?

கலைஞர்: பேராசிரியர் பெருந்தகை சொன்ன விஷயத்தை மறந்துட்டு, எதை எதை மறந்தோம்னு பேசிகிட்டு இருக்கிறீங்க! தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எப்படி நாம் "செக்" வைக்கிறதுன்ற யோசனையை முதல்ல சொல்லுங்க . .

துரைமுருகன்: "ஆணையமா? ஆணவமா?" என்ற தலைப்பில நம்ம கவிஞர் வைரமுத்து தலைமையில் ஒரு கவியரங்கம் நடத்துவோம். தம்பி பா.விஜய் உள்ளிட்ட பலர் தயாராக இருக்கிறாங்க!

கனிமொழி: ஜெகத்ரட்சகன கவிதை வாசிக்க விட்டுறாதீங்க . . .  அவரோட கவிதையைக் கேட்டு நான் கவிதை எழுதுவதை நிறுத்தியே நாளாச்சு! முழுசா என்ன எழுதவிடாமல் செய்துடாதீங்க!

ஆர்க்காடு: யார் கவிதை எழுதுறது, வாசிக்கிறதுன்றது முக்கியமில்லை. ஒவ்வொரு கவிதையும் ரொம்ப "பிரைட்டா" இருக்கணும்!

அன்பழகன்: என்னது பிரைட்டா? அப்படின்னா?

ஆர்க்காடு: சரி, சரி, அதுதான் சீட்டு  தராமல் முடிச்சாச்சில்ல. . .  கருத்து கூட சொல்லக்கூடாதா?

தயாநிதி: பிரம்மாண்டமா செட் போட்டுடுவோம். இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக எனச்சொல்லி 2 வாரம் எபிசோட் போட்டிரலாம்.

ஸ்டாலின்: அமிர்தம் மாமா கோவிச்சுகிடுவாரு மாப்ளே! கலைஞர்ல லைவ் செய்திடுவோம். என்ன நான் சொல்றது?

துரைமுருகன்: தயாநிதி தம்பி! நீங்க பார்க்க எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னுறிங்க. பேசாமல் படத்தயாரிப்ப விட்டுட்டு நடிக்க வந்திடுங்களேன். உலகத்தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி எல்லாத்திலேயும் உங்க படத்த ரிலீஸ் செய்திடலாம்!

அழகிரி: நான் இருக்கிறத மறந்து நீங்களா பேசிக்கிட்டு இருக்கிறீங்க . . .

ஸ்டாலின்: கேப்டன்ன தாக்க நம்ம வடிவேலுவ தயார் செய்ததது போல, தேர்தல் ஆணையத்தைத் தாக்கிப் பேச போண்டாமணியை விட்டா என்ன?

அன்பழகன்: தலைவரே! எனக்கு ஒரு யோசனை. நீங்க உடன்பிறப்பு மாதிரி  பிரதமருக்கு அடிக்கடி கடிதம் எழுதுற மாதிரி, ஒரு நாளு நாளைக்கு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதின என்ன?

(கனிமொழி சிணுங்கிய தொலைபேசியை எடுத்தவாறு,) "என்ன அங்கயும் பிடிச்சாச்சா? அப்படியா?" எனக்கேட்டவாறு,

கனிமொழி:  தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் ரைடுன்னு பணத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்க மாதிரி, யாரோ தேர்தல் அதிகாரி மாதிரி வேஷம் போட்டு போன பணத்தையெல்லாம் மடங்கி எடுத்துட்டு போயிட்டானாம்!

அன்பழகன்: நீ வேற ஏம்மா! எதிர்கட்சிகளுக்கு எடுத்துக் கொடுக்கிற . . . காவல்துறை மந்தியாக இருக்கிற முதல்வர் ஆட்சியில,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு அந்தம்மா பிரச்சாரம் செய்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில பிடிச்சாங்க, பறிச்சாங்கன்னு பேசிக்கிட்டு . . .

ஸ்டாலின்: சரி ,இந்த பூனைக்கு யாரு தான் மணி கட்டுறது?

கலைஞர்: பூனையை யாரு ஏவிவிட்டதுன்னே தெரியல! அதுக்குள்ள மணி கட்டுறது . . . மந்திரிச்சு தாயத்து கட்டுறன்னு சொல்லிக்கிட்டு!

(அவசர அவசரமாக ஜெகத்ரட்சகன் வருகிறார்)

ஜெகத்ரட்சகன்:
பார்த்தீர்களா தலைவரே . . .  இந்த தேர்தல் ஆணையத்தின் ஆணவத்தை?

அன்பழகன்: அதைத்தான் பேசிக்கிட்டு இருக்கிறோம். என்ன செய்யலாம் நீங்க யோசனை இருந்தா சொல்லுங்க . . .

ஜெகத்ரட்சகன்: ஒரு பெரிய கவியரங்கம் நடத்திலாம், இப்பத்தான் வைரமுத்து, பா.விஜய் கிட்ட தேதி வாங்கிட்டு வந்தேன்.

துரைமுருகன்: அய்யா பாராட்டு மன்னா! இந்த யோசனையைச் சொல்லித் தான் வாங்கிக் கட்டிக்கிட்டேன். திருப்பி திரியைக் கொளுத்திப் போடாதே.

(கவிஞர் வைரமுத்து மிடுக்குடன் வருகிறார்)

 வைரமுத்து: டில்லி எப்போதும் நமக்கு வில்லி. காரிருள் தந்தவர்கள் மீண்டும் காரிருள் தருவது தகுமா? பிழைப்பது தான் நம் முறையா?

துரைமுருகன்: குரேஷிக்கு தமிழ் தெரியுமா எனத்தெரியவில்லை. நல்லவேளை பிழைத்துக் கொண்டார்.


(ஸ்டாலினுக்குப் போன் வருகிறது)

ஸ்டாலின்: என்னது நடிகர் கார்த்திக். அறிவாலயம் வருகிறாரா? ஏற்கனவே கிணத்த காணோம்ன்ற பார்ட்டிய வைச்சுக்கிட்டு படுற பாடு தாங்கல. . .   இதுல்ல வேட்பாளர காணல, தொகுதிய காணல எனச்சொல்றவருட்யேயும்  வேற சிக்கணுமா? என பதற


(கூடிய கூட்டம் திசைக்கு ஒன்றாக  திகைத்து ஓடுகிறது.)

                                                                               கற்பனை : ப.கவிதா குமார்


தியாகி லீலாவதி

புதன்

தியாகி லீலாவதியை வரலாறு என்றும் மறந்து விடாது . . . .





மத்திய அரசின் கொள்கையால்
மான்சென்டோ விதையால்
பொய்த்துப் போன பூமி
அடுத்த ஆண்டாவது
நல்ல விளைச்சல் கொடுக்க
வேண்டும் என்ற நேர்த்திக்கடனோடு
கிராமங்களில் இருந்து
அழகர்கோவிலுக்கு
அணிவகுத்து வரும்
மாட்டுவண்டிகளின்
மணிச்சத்தங்கள்
மதுரை வீதிகளில்
எதிரொலிக்கும்
சித்திரை மாதம்.

மதபேதமில்லாமல்
ரமேசும், ராவுத்தரும்
சர்க்கரை ஏந்தி நிற்க
அழகர்மலைக் கள்வர்கள் போல
வேடமிட்டவர்களும்
மந்திகளைப் போல
முகமூடி அணிந்தவர்களும்
" கோவிந்தா" முழக்கங்களோடு
காசுக்காகக் கையேந்தி வரும்
கருட எதிர்சேவை நாள்.

உச்சிச்சூரியன்
உறுப்புகளை
அறுக்கும் வெறியுடன்
உஷ்ணம் கொட்ட
வில்லாபுரம் வீதியில்
வீராங்கனை லீலாவதி
வெட்டிக் கொல்லப்பட்டார்.

நதியின் முகவரி தொலைத்த
வைகை ஆற்றின் மீது நின்று
மாநகராட்சி நீரில்
எழுந்தருளும் கள்ளழகர் மீது
பக்தர்கள் பரவசமாய்ப்
பீய்ச்சுகிறார்கள் தண்ணீர்.

தாகம் தீர்க்கும் தண்ணீர்
விற்பனைப் பொருளாய்
மாறியதற்கெதிராய்
மாமன்றத்தில்
மக்கள் மன்றத்தில் ஒலித்த
எங்கள் தோழர் லீலாவதியின்
குரல்வளை நோக்கி வீசப்பட்ட
கொடிய ஆயுதங்களால்
கொட்டிய குருதி வீதிகளில்
செந்நீராய் ஓடியது.

எண்ணெய் வளத்திற்காக
ஒரு தலைவன் கொல்லப்பட்டான்
என்பது வரலாறு.

தண்ணீருக்காக
ஒரு தலைவி கொல்லப்பட்டார்
என்பதும் வரலாறு.


கொல்லப்பட்டவர்களையும்
கொன்று போட்டவர்களையும்
வரலாறு
என்றும் மறந்து விடாது.


உயிரற்றது
ஜடப்பொருள் என்கிறது கோட்பாடு.‘
அந்தக்கோட்பாட்டை உடைத்தது
தியாகி லீலாவதியின் மரணம்.
ஆம் ! லீலாவதி
ஜடப்பொருள் அல்ல. .  . .
என்றும் பேசும் பொருள்.
(தியாகி லீலாவதி வெட்டிக்கொல்லப்பட்ட நினைவு நாள் - ஏப்ரல் 23 )
                 
                                                                                                 ---கவிதாகுமார்

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது


First Published : 27 Apr 2011 09:49:02 PM IST

இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டு
இதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்
இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லை
அதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்

இதுவெல்லாம் நேற்று...

இன்றோ..?  

இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாக
இதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும் கேட்கின்றாய்?
இதற்கெல்லாம் பதில் சொல்ல இதயத்தில் இடமில்லை..

அலை அலையாய்க் கேள்விக் கணைகள்
வரிசைகட்டி வந்தாலும் அசராமல் பதில் சொல்வேன்...
அந்தோ...
அலைவரிசைக் கேள்வி கேட்டு அதிரவே செய்கின்றாய்...

இதயம் இழந்து நீ கேட்பதனால்,
என்
இதயம் கனத்ததுவே!
நெஞ்சம் நனைத்ததுவே!

பொதுக்கணக்கில் புதுக்கணக்கு- தினமனி



  நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, பொதுக்கணக்குக் குழு (பிஏசி)எதற்காக எல்லோரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, இந்த விசாரணையை ஊத்திக் கவிழ்க்கும் முயற்சியின் முதல்கட்டம் தொடங்கிவிட்டது என அப்போதே தெளிவாகிவிட்டது.


 பி.ஏ.சி.-யின் தனி விசாரணை தேவையில்லை என்ற எதிர்ப்பு ஏற்பட்ட நாளன்று சட்டத்துறைச் செயலரும், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியும் நேரில் விளக்கம் அளிக்க வந்திருந்தனர் என்பதையும், இப்போது கசிந்துள்ள அறிக்கையில், ""அன்றைய தினம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹன்வதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்கிற நடைமுறை சரியானதுதான் என்கிற கருத்தை, சட்டத்துறையைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவித்தார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் இப்போது இணைத்துப் பார்க்கும்போது, இவர்களுக்குக் கோபம் எங்கே கிளைக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.


 நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும்கூட, நாடாளுமன்றத்தால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு, அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து விசாரிக்க முழு உரிமை பெற்றுள்ளது. அதன்படிதான், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசித் துறைச் செயலர் முதல் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து வந்தார். அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது
பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாத சில விஷயங்களும்கூட வெளிப்பட்டுள்ளதும், இவை பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படுமேயானால், இதில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களை நாளை நீதிமன்றமும் கையில் எடுக்கக் கூடும் என்கிற அச்சமும்தான் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

பி.ஏ.சி. விசாரணைக்குத் தடை விதித்த பிறகு, அடுத்ததாக இந்த அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக, சமாஜ்வாதி கட்சியின் அங்கத்தினர் ஒருவர், பகுஜன் சமாஜ் கட்சியின் அங்கத்தினர் ஒருவர் என இரண்டு பேரை மட்டும் தங்கள் பக்கம் "இழுத்து'க்கொண்டு எண்ணிக்கை பலத்தை 11 ஆகக் காட்டி, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, ஜோஷி மீது கடுமையாக வசை பாடினார்கள்.


 இதையெல்லாம்விட பெரிய கேலிக்கூத்து, இவர்களின் "ரகளை' பொறுக்கமாட்டாமல் ஜோஷி வெளியேறியபோது, ஓடுகிறார் என்று கேலி பேசியதுடன், அந்த 11 பேரும் உட்கார்ந்து பிஏசி தலைவராகப் பேராசிரியர் சைபுதின் சோûஸத் தேர்வு செய்தார்கள். பிஏசி தலைவராக இருப்பவர் மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாமல், மாநிலங்களவை உறுப்பினரான சோஸ் தேர்வு செய்யப்படுகிறார் என்றால், இதுகுறித்து இன்றுவரையிலும் மக்களவைத் தலைவரும் பிரதமரும் ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பார்கள் என்றால், இதை என்னவென்பது?

இந்த அறிக்கை உள்நோக்குடன் கசிந்தது என்றும், மத்திய அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கருதினால் அதை பிஏசி கூட்டத்தில் விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் நியாயமானதே. ஆனால், அதற்காக அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது இத்தனை நாள்களாக பிஏசி நடத்திய விசாரணையையே அழிப்பதாக ஆகாதா?

பி.ஏ.சி.-யில் ஒவ்வொருவரும் தெரிவித்த தகவல்களை வைத்துத்தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுப்பினர்களுக்கே நன்றாகத் தெரியும். அத்தனையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள். இதில் தனியாக ஜோஷியோ அல்லது பாஜகவோ இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால், விசாரணையில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக எழுதப்பட்ட பகுதிகள் எவையெவை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரினால் அது நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கும்.

இவர்களது அடிப்படை அச்சம் , இணையான விசாரணை நடந்தால், அறிக்கை வெளியானால், தங்கள் குற்றம் மேலும் உறுதி செய்யப்படும் என்பதுதான். ஆகவேதான் காங்கிரஸýம் திமுகவும் இதில் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.


 நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாகத் தயாரித்துவிட்டார் என்று கூக்குரலிடுகிறார்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள். இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும்போது, குழுவின் சார்பில் விசாரணையின்போது அனைவரும் கலந்துகொள்வதும் அதன் தலைவர் அறிக்கையைத் தயாரிப்பதும்தானே வழக்கம். அந்த அறிக்கை குழுவின்முன் விவாதத்துக்கு வைக்கப்படும்போது, தங்கள் ஆதரவையோ, ஆட்சேபணைகளையோ உறுப்பினர்கள் பதிவு செய்வதுதானே முறை?

பொதுக்கணக்குக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான், காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் ஆவேசத்துக்கும், அவசரத்துக்கும் காரணம். 2003-ல் கார்கில் போரின்போது ராணுவக் கொள்முதல்கள் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூட்டா சிங் த.லைமையிலான பொதுக்கணக்கு விசாரணைக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் அன்று ஆட்சியிலிருந்த பாஜக தடுத்தது. இப்போது, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் இன்றைய ஆளும் கட்சிகள் தடுக்கின்றன.


 தவறுகளையும், முறைகேடுகளையும் யார் செய்திருந்தாலும் வெளிக்கொணர வேண்டிய நமது மாண்புமிகு உறுப்பினர்கள், தவறுகளை மூடி மறைப்பதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது. இந்தியா ஒளிர்கிறது, நிஜம்.















































































Friday, 29 April 2011

நீதியை மிரட்டும் ...

நீதியை மிரட்டும் ...

மேலூர் தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்க கோரி மு.க.அழகிரி நடத்திய நாடகம் இதோ... 

2011 சட்டமன்ற பொது தேர்தலில் பனபலத்தையும் தமது அராக்கிரம... பராக்கிரம...பலசாலிகளையும் பயன்படுத்தி   திருமங்கலத்தைப் போலவே வெற்றி பெற்று விடலாம் என்று மிதப்பில் இருந்த மு.க.அழகிரி க்கு தேர்தல் ஆணையம்  நெருக்கடி கொடுக்கும் வகையில் நேர்மையான, கடுமையான   மூன்று அதிகாரிகளை நியமித்து சவுக்கை கையில் கொடுத்து சுழட்ட ஆரம்பித்தது, வெற்றிக்கனியை  எளிதாக   சுவைத்து விட நினைத்தவர்களின் முதுகில் சவுக்கின் தழும்புகள் தாராளமாய் பாய... துடித்துப்போன அழகிரி,   தனது அடிவருடிகளிடம்  சீறினார்... விளைவு... 

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சகாயத்தை மாற்றினால் தான் காரியம் கைகூடும் என்ற முடிவுக்கு வந்தார் அழகிரி   

மதுரை கிழக்குதொகுதி தேர்தல் அதிகாரியும் மதுரை கோட்டாட்சியருமான சுகுமார் மூலம் சூழ்ச்சியை ஆரம்பித்தார்.  

மதுரை கோட்டாட்சியர் சுகுமார்   மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தன்னை அழகிரிக்கு எதிராக செயல்படும் படி வற்புறுத்துவதாக சொன்ன பொய் குற்றச்சாட்டை கூறிய சுகுமார் ஆளும் கட்சி டி வி களுக்கு மட்டும் பேட்டியை கொடுத்துவிட்டு மருத்துவமனையில் படுத்துக்கொண்டார். தேர்தல் ஆணையத்திற்கு சுகுமார் எழுதியதாக கூறப்பட்ட கடிதம் ஆளும் கட்சி டி வி களில் உடனடியாக காட்டப்பட்டது.  
அதே  நேரம் சுகுமார் துறை ரீதியாக எழுதிய கடிதத்தின்  நகலை   அழகிரி  தேர்தல் ஆணையத்திற்க்கு  இனைத்து  அனுப்பியது எப்படி? என்ற கேள்வியும் எழுந்தது.


தேர்தல் ஆணையம்  மதுரை கோட்டாட்சியர் சுகுமார்   எழுதிய கடிதம் பொய்யானது என அதனை ஏற்க்காமால் அவரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான கடுமயான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தது.

அழகிரியின் முதல் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் வைத்த முதல்  ஆப்பு...

ஆட்ச்சி அதிகாரத்தால் நினைத்தை சாதித்து வந்த அழகிரி இதை சற்றும் எதிர் பார்க்காத நிலையில்
மேலூர் வல்லடிகாரர் கோவிலில் வைத்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்த்து தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டம்  நடத்தியதை படம் பிடிப்பதற்காக வீடியோ கிராபருடன் அந்த இடத்திற்க்கு வந்த தாசில்தார் காளிமுத்துவை நோக்கி அழகிரி கோபத்தில் கத்த அருகே இருந்த திமுக வைச்சேர்ந்த துனைமேயர் மன்னன் மேலூரைச்சேர்ந்த ரெகுபதி திருஞானம் உள்ளிட்டவர்கள் பாய்ந்து வந்து சரமரியாக தாக்கியுள்ளனர். அங்கே இருந்த டி எஸ் பி மனிவன்னன் அவரை பாதுகாத்து மீட்டு வந்துள்ளார். தாக்குதலுக்குள்ளான தசில்தார் தன்னை மத்திய அமைச்சர் அழகிரி கோபமாக திட்டியதாகவும் அதனைத்தொடர்ந்து மற்றவர்கள் தக்கியதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்ச்சிக்கு பேட்டியளித்தார். அப்படியே போலீசில் புகாரும் செய்தார்.

சக தாசில்தார் தாக்கப்பட்டதை பொருத்துக்கொள்ள முடியாத வருவாய் அலுவலர்கள் தமிழ்  நாடு முழுவதும் போரட்டங்களை நடத்தினார்கள் .

இதை சற்றும் எதிர்பாராத அழகிரி அடுத்து என்ன நடக்குமோ என்று அச்சமடைந்தார். 

தாக்குதலுக்குள்ளான காளிமுத்துவை தனக்கு சாதகமாக்கினால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம் என அடுத்த சூழ்ச்சியை ஆரம்பித்தார் அழகிரி...

விளைவு...

அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை மாவட்ட ஆட்சி தலைவர் சொன்னது போலவே போலீசில் புகார் செய்ததாக பல்டி அடித்தார் தாசில்தார் காளிமுத்து.அதே சூட்டோடு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பினார்.

இதுவும் ஆளுங்கட்சி டிவி களில் மட்டுமே ஒளிபரப்பபட்டது.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சிதலைவர் சகாயத்தை மாற்ற வேண்டும் என சென்னை உயர்  நீதிமன்றத்தில் அழகிரி தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சகாயம்  நேர்மையானவர் என்ற சான்றும் தேர்தல் ஆணையத்தால் வழ்ங்கப்பட்டது.

இது அழகிரி க்கு வைத்த 2 வது ஆப்பு....

இதற்கிடையில் அடுத்து எதுவும் நடக்கலாம் என்ற நிலையில்

மேலூர் தாசில்தர் தாக்கப்பட்ட மேட்டரில் அழகிரி உள்ளிட்டவர்கள் அவசர அவசரமாக உயர்  நீதிமன்றம் மதுரைகிளையில் முன் ஜாமீன் பெறப்பட்டது.

மீண்டும் சூடுபிடித்தது...  


 மேலூர் தாசில்தர் தாக்கப்பட்ட மேட்டரில் தன்னை விடுவிக்க வேண்டும் என அழகிரி சென்னை உயர்  நீதி மன்ற மதுரை கிளையில்
வழக்கு தொடுத்தார்.
 அவருக்கு ஆதரவாக தாக்குதலுக்குள்ளான மேலூர் தாசில்தார் காளிமுத்து மூலமே அப்படி ஒரு சம்பவம்  நடை பெறவில்லை என பிரமான வாக்கு மூலத்தையும் தாக்கல் செய்ய வைத்தனர்.

இந்த வழக்கு விசாரனை ஏப்ரல் 28 ம் தேதி சென்னை உயர்  நீதி மன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.எஸ்.இராமனாதன் முன்னிலையில்   நடைபெற்றது.  



இதர் எந்தவித  வேறு பல திட்டங்களை தீட்டிய

முகவுரை

வணக்கம்
         
வாசகர்களே !
   என்ன இது தலைப்பே வில்லங்கமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா?
ஆமாங்க ஒவ்வொரு மனுசனும் கடைசியா போற இடம் சுடுகாடு தான் என்பதை ஒவ்வொரு நிமிடமும் உனர்த்தனும் என்பதற்க்காகவே வச்சுருக்கோம். 


அதனால நாட்டுல  அனியாயம் அக்கிரமம் ரவுடித்தனம் ஊழல் செய்யிற ஒவ்வொருத்தனப்பத்தியும் இந்த சுடுகாட்டுல எழுதி நாட்டு மக்களுக்கு தெரியப்படுதப்படும். 


இதைப்பற்றி அறிந்தவர்கள் எங்களுக்கு எழுதனும்   


சம்மந்ததப்பட்டவர்கள் திருந்தனும் .


அதுக்காகவே இது தொடங்கப்பட்டுள்ளது    தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும். 


--சுடுகாடு டீம்  

Popular Posts

ithanal

About Me

வணக்கம் வாசகர்களே ! நம்ம சாமக்கோடாங்கி அப்பப்ப நாட்டுல நடக்கிற நல்லது கெட்டதெல்லாம் சொல்லுவாறு... அதுக்கு நீங்களும் ஒத்துழைக்கனும். உங்களுடைய கருத்துக்களயும் உங்களுக்கு தெரிஞ்ச விசயத்தையும் எழுதுங்க...
Powered by Blogger.. Powered by Blogger.