Monday, 2 May 2011

சிபிஐ வானத்திலிருந்து குதித்து வந்ததா ?

mm_singh_a_raja_20101129


 
திங்கட்கிழமை, 02 மே 2011  
1991-1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த,
காங்கிரஸ், பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட
வேண்டும்என்று பலத்த கோரிக்கை எழுப்பினர். இதற்கு சட்டசபையில்
பதிலளித்த, ஜெயலலிதா,
சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்து வந்ததா என்று கேட்டார்.
கேட்டதோடு நில்லாமல், சிபிஐ ஒன்றும் தவறே செய்யாத
ஒரு அமைப்பு அல்ல என்றும் கூறினார்.

இன்றைக்கு, உச்ச நீதிமன்றமே, சிபிஐ மிகச் சிறப்பாக செயல்படுகிறது
என்று நற்சான்று
அளித்துள்ளது. நாடே மிக ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த
ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில், சிபிஐ இரண்டு குற்றப் பத்திரிக்கைளை
தாக்கல் செய்துள்ளது. இந்தஇரண்டு குற்றப் பத்திரிக்கைகளிலும்,
சிபிஐ சரியான முறையிலும், நேர்மையான
முறையிலும் செயல்பட்டிருக்கிறதா என்பதை வைத்தே, சிபிஐ யின்
பாரபட்சமற்றஅணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை முடிவு
செய்ய இயலும்.

சிபிஐ யின் முதல் குற்றப் பத்திரிக்கையை எடுத்துக் கொள்வோம்.
இந்தக் குற்றப்பத்திரிக்கையின் படி, ஸ்பெக்ட்ரம் விண்ணப்பங்களை ஏற்றுக்
கொள்வதற்கானகடைசித் தேதியை 25.09.2007 என ராசா மாற்றியதே
கூட்டுச் சதித் திட்டத்தின் வெளிப்பாடுஎன்று தெரிவிக்கிறது.
இவ்வாறு 25.09.2007 என்பதை கடைசித் தேதியாக மாற்றியதனால்
தான், ஸ்வான் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் பயன் பெற
முடிந்தது என்று சிபிஐ தெரிவிக்கிறது. இவ்வாறு கடைசித் தேதியை
தன்னிச்சையாக ராசா மாற்ற முயற்சிஎடுத்ததற்கு, தொலைத் தொடர்
புத்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், அந்த எதிர்ப்புகளை
யெல்லாம் மீறித் தான் ராசா, தனது சதித்திட்டத்தை நிறைவேற்றுகிறார்
என்று சிபிஐ தெரிவிக்கிறது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின்
கருத்தை பெறவேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்
கோப்பில் எழுதியதை தொடர்ந்து,கோப்பு நீதித்துறை அமைச்சகத்துக்கு
அனுப்பப் படுகிறது. நீதித்துறை அமைச்சகம், இந்தமுடிவை ஒரு அமைச்சர்
எடுப்பதற்கு பதிலாக, ஒரு அமைச்சரவை குழு எடுக்கலாம் என
பரிந்துரைக்கிறது.

இந்த நிலையில், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆ.ராசா,
02.11.2011 அன்று, மன்மோகனுக்குஒரு கடிதம் எழுதுகிறார்.
அந்தக் கடிதத்தில், நீதித்துறை அமைச்சகம், ‘ஓவராக பேசுகிறது’
அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது. ஏராளமானோர்,
 ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பித்திருப்பதால், உடனடியாக
ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும்
என்று எழுதுகிறார்.

அந்தக் கடிதம் பிரதமரைச் சென்றடையும் முன்பாகவே,
அதே நாளில் 02.11.2007 அன்றே மன்மோகன், ராசாவுக்கு
ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “ஏராளமானோர்,
ஸ்பெக்ட்ரம் வேண்டி, விண்ணப்பித்திருப்பதால், எவ்வளவு
ஸ்பெக்ட்ரம் இருக்கிறது என்பதை கவனமாக பரிசீலிக்கவும்,
ஸ்பெக்ட்ரம் வழங்காமல் வெறும் லைசென்ஸ் மட்டும் வழங்கு
வதால் யாருக்கும் பயன் இல்லை” என்று எழுதுகிறார்.

அன்று இரவே, மன்மோகனுக்கு ராசா பதில் எழுதுகிறார்.   எந்த
விதிமுறைகளையும் மீறாமலே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்
பட்டு வருகிறது. அதனால், விதிமீறல் இல்லாமலே முடிவெடுக்கப்
படும் என்று எழுதுகிறார்.
























ராசா கடிதம் எழுதிய 02.11.2007 அன்றே, அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பாகவே மன்மோகன் ராசாவுக்கு எப்படி கடிதம் எழுதுகிறார். ராசா தன்னை இந்த விவகாரத்தில் கோர்த்து விடப் பார்க்கிறார், அதனால் நாம் முந்திக் கொள்வோம் என்று மன்மோகன் இப்படி கடிதம் எழுதினாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும்.   மன்மோகன் ராசாவுக்கு எழுதிய கடிதம் எப்போது தயார் செய்யப் பட்டது, இவ்வாறு கடிதம் எழுத வேண்டும் என்ற உத்தரவு யாரால் வழங்கப் பட்டது, நேரடியாக ராசாவை அழைத்து விவாதிக்காமல், இப்படி கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன, என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டியது மன்மோகன் அல்லவா ? மன்மோகன் சிங்கின் செயலாளர், அந்தரங்க காரியதரிசி, பிரதமர் அலுவலகத்தில் இந்த கடிதத்தை தயார் செய்தவர் என்று அத்தனை பேரையும் அல்லவா சாட்சியாக விசாரிக்க வேண்டும் ? மன்மோகனை ஏன் சிபிஐ விசாரிக்கவில்லை ?   மன்மோகனின் கீழ் சிபிஐ பணியாற்றுவதாலா ?
 3408386309_72d31a3f26_o
இது மட்டும் அல்ல. இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும் போது, ராசாவின் தீய நோக்கத்துக்கு மற்றொரு தடை, வருகிறது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையை பின்பற்றினாலும், ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு முன்பாக விண்ணப்பம் வழங்கிய நிறுவனங்களும் இருப்பதால், அந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்க ஏதுவாக, ஒரு மணி நேரத்திற்குள் மொத்த கட்டணத்திற்கான வரைவோலையை (டிமான்ட் ட்ராப்ட்) வழங்க வேண்டும் என்ற விதிமுறையில் ராசா திருத்தம் கொண்டு வருகிறார்.   இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த, தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், இவ்வாறு விதிமுறையை மாற்ற இயலாது என்று கோப்பிலேயே எழுதி விடுகிறார்கள். இவ்வாறு கோப்பிலேயே பதிவு செய்தது, ராசாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கோப்பில் எழுதியதை எப்படி அழிக்க முடியும் ?

இதை மீறுவதற்கு ராசா கையாண்ட தந்திரம், மன்மோகனுக்கு மீண்டும் ஒரு கடிதம்.   அந்தக் கடிதத்தில், விண்ணப்பங்கள் ஏராளமாக வந்துள்ளன. நேரமோ மிகக் குறைவாக இருக்கிறது (எதுக்கு துட்டு வாங்கவா ?) அதனால் நான் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, உடனடியாக ஸ்பெக்ட்ரம் வழங்குவதென முடிவெடுத்து விட்டேன்….  என்று கடிதம் எழுதுகிறார்.
manmohan_raja_2gspectrum_Page_08

manmohan_raja_2gspectrum_Page_09

  மன்மோகன் பிரதமரா, ராசா பிரதமரா என்ற சந்தேகம் எழுகிறதல்லவா ? மன்மோகனுக்கு அது போன்ற சந்தேகமெல்லாம் இல்லை. நான் பிரதமராக இருக்க வேண்டுமே என்ற கவலை மட்டுமே. பிரதமருக்கு கீழ் பணியாற்றும், ஒரு அமைச்சர், நான் இப்படித் தான் செய்யப் போகிறேன் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால், அந்தக் கோப்பை என்னிடம் அனுப்புங்கள் என்றல்லவா மன்மோகன் உத்தரவிட்டிருக்க வேண்டும் ?   அதை விடுத்து, மன்மோகன் என்ன செய்தார் தெரியுமா ? ராசாவுக்கு ஒரு பதில் கடிதம் எழுதுகிறார்.
 a-raja4_20110202

manmohan_raja_2gspectrum_Page_13

இதுதான் மன்மோகன் எழுதிய கடிதம். ஒரு நபர், நான் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறேன் என்று மற்றொருவருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தை பெற்றவர், உங்கள் கடிதம் வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு, அது போல ஒரு கொள்ளை உண்மையிலேயே நடந்தது என்றால், முன் கூட்டியே தகவல் பெற்ற நபரை கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றப் பத்திரிக்கையில் சேர்ப்பது தானே முறை ? ஆனால், மன்மோகனை சாட்சியாக கூட சிபிஐ விசாரிக்கவில்லை என்பதே, சிபிஐ யின் யோக்யதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அல்லவா ?

அன்று மன்மோகன் தலையிட்டு, ராசாவை தடுத்திருந்தார் என்றால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியிருக்கும் தானே ? இன்று இந்த சிபிஐ விசாரணை, அதற்கு ஒரு செலவு என்று தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கான அவசியம் இல்லாமல் போயிருக்குமே ?
 manmohan
இந்த நிலையில், சிபிஐ யின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய மன்மோகன், சிபிஐ, விருப்பு வெறுப்பின்றி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளது, சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ?

இதோடு முடியவில்லை. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக குலாம் ஈ வானாவதி என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு வழக்கறிஞர் வேலையை தவிர, மற்ற எல்லா வேலைகளும் அத்துப் படி. அந்த நபரிடம், ராசா, இது போல, நான் விதிமுறைகளை மாற்றி ஒரே நாளில் மொத்த பணத்தையும், வரைவோலையாக கட்ட வேண்டும் என்ற உத்தரவிடப் போகிறேன் என்று எழுதுகிறார். அதற்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில், வானாவதி, “ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான கோப்புகளை நான் பார்த்து விட்டேன். ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான வழக்குககள் எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. எடுக்க உத்தேசித்திருக்கும் முடிவு நியாயமானதும், வெளிப்படையானதும் ஆகும். இது தொடர்பான பத்திரிக்கை குறிப்பு, அனைத்தையும் வெளிப்படையானதாக்கும். எல்லாம் சரியாக உள்ளது”. இதுதான் வானாவதி வழங்கிய கருத்துரை.
5528173855_4d87923715_b

இந்த நபர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட வேண்டுமா இல்லையா என்று சொல்லுங்கள். இந்த நபரும் சேர்க்கப் படவில்லை.

இதை விட, சிபிஐ செய்துள்ள மிகப் பெரிய குளறுபடி ஒன்று உள்ளது. அது, மன்மோகனையும், வானாவதியையும் காப்பாற்றியதை விட, மிகப் பெரிய அயோக்கியத்தனமானது.

ஆண்டிமுத்து ராசா மற்றும், யூனிடெக் நிறுவனம் மற்றும், ரிலையன்ஸ் (ஸ்வான்) ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டு தேசத்தில் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை கொள்ளையடித்ததாக குற்றச் சாட்டு.   இவர்களுக்கு இணையாக இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்ட மற்றொரு நிறுவனம், டாடா.   டாடா நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இரட்டை லைசென்ஸ் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் படுகிறது. இரட்டை லைசென்ஸ் என்றால் என்னவென்றால், ஏற்கனவே லைசென்ஸ் பெற்று, சிடிஎம்ஏ தொழில் நுட்பத்திற்காக ஸ்பெக்ட்ரம், ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, ஜிஎஸ்எம் தொழில் நுட்பத்திலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது. ரிலையன்ஸ் மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது போல ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணபப்பித்திருந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய ராசா, ஜனவரி 2008ல் டாடா நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார்.   ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்குமே, 2001ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய விலையில் ஒதுக்குகிறார். இந்த ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. நிதித் துறை, தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் அதிகாரிகள், எழுத்து பூர்வமாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.   ஆனால், ராசா, ‘போங்கடா வெண்ணைகளா’ என்று 2001 விலையான 1700 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். ரத்தன் டாடா என்ன செய்கிறார் தெரியுமா ?   ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற உடன், டாடா டெலிசர்வீசஸின் 27 சதவிகித பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோl2007052413423கோமோ என்ற நிறுவனத்துக்கு விற்கிறார். எவ்வளவுக்கு தெரியுமா 14 ஆயிரம் கோடிக்கு. இப்படி கொள்ளை லாபம் பெற்றதற்காகத் தான், அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ் கட்டிடத்தை ராசாத்தி அம்மாளுக்கும், அவரின் தவப்புதல்விக்கும் தாரை வார்த்தார் ரத்தன் டாடா.

நவம்பர் 2007ல், ரத்தன் டாடா கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம், நீரா ராடியா மூலமாக, கருணாநிதியிடம் நேரடியாக கொடுக்கப் படுகிறது. (இளைஞன் படத்துல, நீரா ராடியாவ கருணாநிதி ஏன் ஹீரோயினா போடல ?. அவங்க கழக நீரோட்டத்துல இணைஞ்சிருந்தா, குஷ்பூவுக்கு இடம் இல்லாம போயிருக்குமா ?)

அந்தக் கடிதத்தில், “இந்திய வரலாற்றில் தொலைத் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பு உங்கள் கட்சியிடம் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வையோடும், புதிய சிந்தனைப் போக்கோடும், நீங்களும் உங்கள் அமைச்சரும் இத்துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை பாராட்ட வேண்டியது வரலாற்றின் கடமை.   தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சியை சீர்குலைக்க பல்வேறு சக்திகள் முயன்று வருகின்றன. அந்த பொய்யான தகவல்கள் குறித்த உண்மையை உங்களுக்கு விளக்குவதற்காக நீரா ராடியாவிடம் இக்கடிதத்தை நேரடியாக கொடுத்தனுப்புகிறேன்.”
 letter_part1_20110221

letter_page2_20110221
இந்தக் கடிதத்தை விட, கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?   இது வரை எந்த அமைச்சரையுமே பாராட்டாத ரத்தன் டாடா, எதற்காக தனிப்பட்ட முறையில் இப்படி ஒரு கடிதத்தை எழுத வேண்டும் ?

இது மட்டுமல்ல. யூனிடெக் நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலிருந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற விலை 1700 கோடி ரூபாய். இந்த 1700 கோடி ரூபாயும், டாடா நிறுவனத்தால் வழங்கப் பட்டிருக்கிறது என்பது விசித்திரமான உண்மை.   டாடா குழுமத்தின் டாடா ரியாலிட்டி நிறுவனத்தின் மூலமாக யூனிடெக் நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட 1700 கோடி ரூபாயையும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக யூனிடெக் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது, ஆதாரங்களோடு அம்பலப் பட்டிருக்கிறது.   ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஸ்வான் நிறுவனம் என்ற ஒன்றை உருவாக்கியதென்றால், டாடா நிறுவனம், ஏற்கனவே இருந்த யூனிடெக் நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரித்ததாகவே தெரியவில்லை.
 page_12_20110121
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம் தனது பங்குகளை துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு விற்றது, யூனிடெக் நிறுவனம் தனது பங்குகளை நார்வேயின் டெலிநார் என்ற நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது என்று பட்டியலிடும், சிபிஐ, டாடா நிறுவனம், டோகோமோவுக்கு தனது பங்குகளை விற்று கொள்ளையோ கொள்ளை அடித்ததைப் பற்றி மூச்சு விடவில்லை.

சிபிஐ வானத்திலிருந்து குதித்ததா என்ற கேள்வி சரியான கேள்வி தானே ?   போபர்ஸ் விவகாரத்தில் சிபிஐ, செய்த அயோக்கியத் தனங்களை பார்த்திருக்கிறோம் தானே…. ? இது மட்டும் என்ன விதிவிலக்கா ?

சிபிஐயில் பணியாற்றுபவர்களும் மனிதர்கள் தானே…. ?   அவர்களுக்கும், ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், உயிர் பயம் எல்லாம் இருக்கும் தானே… ?

சரி இவ்வளவு நேரம் சீரியசாகவே படித்து விட்டோம். கொஞ்சம் நகைச்சுவையை சுவைக்கலாமா.   தான் எடுக்கும் முடிவுகள் குறித்து, மன்மோகனுக்கு கடிதம் எழுதிய ராசா, மற்ற விவகாரங்களுக்குப் பிறகு, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது.
 karunanidhi_a_raja_20110307
“இந்தத் துறையில் நான் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே, மக்களுக்கு குறைந்த விலையில் செல்போன் சேவையை வழங்குவதற்காகவும், கிராமப் புறங்களில் செல்போன் சேவையை விரிவுபடுத்துவதற்காகவுமே.”

நன்றி   சவுக்கு   இணையம்

கண்ணே பாப்பா கனியம்மா.

KANIMOZHI_10674f
கனிமோழிக்கு சவுக்கின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.   இந்த பிறந்த நாள் கனிக்கு இனிமையாக இருந்ததா என்றால் இல்லை. இன்று கனிமொழி ஒரே அழுகாச்சி..   எல்லா பிறந்த நாளுக்கும் கூடவே இருந்து மதிய உணவு சாப்பிடும் கருணாநிதி இந்த பிறந்த நாளுக்கு கூட இருந்து மதிய உணவு உண்ணாதது மட்டுமல்ல, காலையில் வந்தவர் மாலை வரை மீண்டும் வரவேயில்லை.

இதனால் கனிமொழி ஒரே அழுகையாம்… அய்யோ பாவம்.. இதுக்கு ஏன் மேடம் அழுவுறீங்க… வோல்டாஸ் கட்டிடமா கைய விட்டுப் போச்சு…. ? இல்ல விருகம்பாக்கத்துல இருக்கற 78 க்ரவுண்டா போச்சு…. அப்பா சாப்பிட வரல அவ்ளோதானே மேடம்… ? இதுக்குப் போய் அழுவலாமா ? ஆனா, உங்களுக்கு கொஞ்சம் சோகம் இருக்கத் தான் செய்யும். உங்க அண்ணன் வேற சென்னை சங்கமம் நடக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காறாமே.. உங்கள எம்.பி பதவிய வேற ராஜினாமா செய்யச் சொல்லிருக்காறாமே… என்ன மேடம், இந்த பிறந்த நாள் உங்களுக்கு இப்படி சோகமா அமைச்சுருச்சு ?

 Kanimozhi_thinking

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
சவுக்குக்கு உண்மையிலேயே கஷ்டமா இருக்குமேடம்… ?

உங்க அண்ணன், அஞ்சா நெஞ்சன் போன வாரம் என்ன பண்ணார் தெரியுமா ? 31 டிசம்பர் அன்னைக்கு நைட்டு, உங்க டாடிக்கு போன் பண்ணி “அப்பா, ராசாவையும் கனிமொழியையும் கட்சிய விட்டு நீக்கி வையுங்க. இல்லன்னா, நான் மந்திரி பதவியையும் கட்சிப் பதவியையும் ராஜினாமா பண்ணிடுவேன். அப்புறம் உங்க இஷ்டம்“ என்று சொல்லி விட்டு, “இதுதான் எனது புத்தாண்டு செய்தி“ என்று வேறு சொல்லி விட்டார். உங்க டாடி ரொம்ப கவலையாகி, என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கார்.

இந்த டென்ஷன்லதான் இப்பவும் இருக்கார். முந்தா நாள் என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியாது மேடம். முந்தா நாள் நைட்டு, அஞ்சா நெஞ்சன் கோபாலபுரம் வந்தாரு. வந்து அன்னைக்கு நைட்டே, பஞ்சாயத்த ஆரம்பிச்சுட்டாரு.   “நானும் தம்பியும் ஊர் ஊரா அலஞ்சு கட்சிய வளக்குறோம். கட்சிக்காக நாயா உழைக்குறோம். ஆனா என்ஜாய் பண்றது மட்டும் அந்தக்  குடும்பமா ? “ என்று பஞ்சாயத்தை தொடங்கியிருக்கிறார். உங்க டாடி முந்தாநாள் நைட்டு பத்து மணிக்கு கௌம்பி போனார் ஞாபகம் இருக்கா… ? அது உங்க அண்ணன் குடுத்த டார்ச்சர்ல தான் மேடம். போய் உங்க அண்ணன கன்வின்ஸ் பண்ணப் பாத்துருக்கார்.   ஆனா அஞ்சா நெஞ்சன் கொஞ்சமும் மசியல.   நேத்து காலையில இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்து நடந்தது மேடம்.   நேத்து காலையிலயே தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு உங்க டாடிக்கிட்ட லெட்டர் குடுத்துட்டாரு.
 Kanimozhi_Pic_by_HK_Rajashekar
ஈழப் போராட்டத்துக்காக உங்க எம்.பி பதவிய ராஜினாமா பண்ணி உங்க டாடிக்கிட்ட லெட்டர் கொடுத்தீங்களே… அது மாதிரி இல்ல மேடம் இது…. உங்க அண்ணன் நெஜம்மாக்குமே கோபமா இருக்கார்.


உங்க டாடி படா கேடியாச்சே…. அவர் என்ன பண்ணார் தெரியுமா ? ராஜாவை கட்சிய விட்டு நீக்கறதுக்கு பதிலா, பூங்கோதையை அமைச்சர் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வைச்சுட்டு, உங்க அண்ணன சமாதானப் படுத்தலாம்னு ட்ரை பண்றாரு. அதாவது பூங்கோதை ராஜினாமா செய்தால் உங்க அண்ணன் கோபம் கொறஞ்சுடுமாம்.   உங்க அண்ணன் உங்க டாடிய எத்தனை வருஷமா பாக்கறாரு…. ? உங்க டாடியோட கேடி வேலை தெரியாது அவருக்கு ? அதுனால அவரு காண்டாயிட்டாரு.

உங்க டாடி இன்னைக்கு காலைலே வீட்டுக்கு வந்து உங்களுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு, ஒரே ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டாரா… சாப்டுட்டு நேரே தலைமைச் செயலகம் போனாரா… போனவுடன் டிவியப் போட்டுப் பாத்துருக்கார். என்டிடிவி சேனல்ல, அழகிரி மந்திரி பதவிய ராஜினாமா செய்து விட்டார்னு நியூஸ் ஓடிட்டு இருக்கு… அவ்ளோதான். உங்க டாடிக்கு வந்துச்சு பாருங்க கோபம்…. கத்தித் தீத்துட்டாரு…
 2056RedRose1024768
அந்தக் கோபத்துலதான் மேடம் லன்ச்சுக்கு உங்க கூட சாப்பிட வரல… டாடிக்கு உங்க மேல கொள்ளைப் பிரியம் மேடம்.   2001ல் அவர் அரெஸ்ட் ஆனப்போ, சென்ட்ரல் ஜெயில்ல அவர் பக்கத்துலேயே இருந்தீங்களே ஞாபகம் இருக்கா ? அதே மாதிரி நீங்க அரெஸ்ட் ஆகும்போது, அவர் கூட இருக்காரா இல்லையான்னு பாருங்களேன்…. கண்டிப்பா இருப்பார். நீங்க அவர் செல்லப் பெண் மேடம்.

உங்களுக்கு இருக்கற பிரச்சினை பத்தாதுன்னு, பாருங்களேன், சில வேலையற்றவர்கள், நீங்க ஆசை ஆசையா நடத்துற சென்னை சங்கமம் நிகழ்ச்சியில போலிப் பாதிரி கஸ்பர் கலந்துக்கக் கூடாதுன்னு, ஒரு பொது நல வழக்கு வேற சென்னை உயர்நீதிமன்றத்துல போட்ருக்காங்களாம்.   என்ன கொடுமை மேடம் இது….
 1_2
எவ்ளோ ஆசை ஆசையா ப்ரெஸ் மீட் கொடுத்தீங்க… சென்னை சங்கமம் தொடர்பா… சிபிஐ ரெய்டு பண்ணாலும் சென்னை சங்கமம் நடக்கும்னு எவ்ளோ நம்பிக்கையோட சொன்னீங்க….

பாருங்களேன். கேஸ் போட்டு எப்படி உங்க நிம்மதிய கெடுக்கறாங்க…. உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் ஜாபர் சேட் எப்படி மேடம் இருக்காரு ? நீங்க ஏதாவது பத்திரிக்கைக்கு பேட்டு கொடுத்தா, அந்த பத்திரிக்கை ஆபீசுக்கு போன் பண்ணி “நல்லா போடுங்க“ ன்னு ஏன் மேடம் கேட்டுக்கறாரு… ?

ஆனா ஒரு விஷயம் மேடம். ஊரு பூரா வசூல் பண்றாரு… உங்க பர்த்டே போட்டோவப் பாத்தா உங்க டாடிக் கிட்டயே நீங்க வசூல் பண்றீங்களே மேடம். உங்க திறமை இதிலேயே தெரியுது மேடம்.

 kani2
பிறந்த நாள் வாழ்த்துக்களோட, உங்களுக்கு ஒரே ஒரு ரெக்வெஸ்ட் மேடம். சவுக்குக்கு வேலை இப்பவோ, அப்பவோன்னு இருக்கு.. எப்படியும் 10 நாள்ல டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க. அப்போ சவுக்குக்கு சம்பாத்தியத்துக்கு வழி வேணும்.   சவுக்குக்கு வேலை போயிடுச்சுன்னா, அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி பணத்தை எண்ணி வைக்கிற வேலை கொடுங்க மேடம். உங்களுக்கு இருக்கற ஆயிரம் வேலையில, இவ்ளோ பணத்தை உங்களால மட்டும் எண்ண முடியாது.   ஊருல யாரையும் நம்ப வேற முடியல…..

சவுக்கு காசு விஷயத்துல நேர்மையா நடந்துக்கும் மேடம்.   அதனால நம்பி அந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியக் குடுக்கலாம்.   கரேக்டா எண்ணித் திருப்பிக் கொடுத்துடும் மேடம்.

மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்.

கனிமொழி தொண்டுள்ளம் கொண்டவர் - கருணாநிதி

28.04.11 திமுக சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல் பாதுகாப்பதுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழலுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை கூடிய திமுக உயர்நிலைக் குழு செயல் திட்டக் குழு கூட்டம் வழக்கத்தைவிட அமைதியாகவே முடிந்தது. துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டாலும் யாரும் அதிகம் பேசவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கனிமொழியை ஆதரித்துப் பேசினார். 2ஜி அலைக்கற்றை வழக்கு குற்றச்சாட்டிலிருந்து கனிமொழியைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் உடைந்த குரலில் எடுத்துக் கூறினார்.

"இன்றைக்கு கனிமொயை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையில்தான் பார்க்கிறேனே தவிர கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தன்னார்வ அமைப்புக்களின் துணையுடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அந்தப் பகுதி அமைச்சர்களோடும் மாவட்ட ஆட்சியர்களோடும் தொழில் நிறுவனங்களோடும் இணைந்து 9-க்கும் மேற்பட்ட நகரங்களில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி 1 லட்சத்து 34 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்துள்ளார். மேலும் 55 ஆயிரத்து 656 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

எனவே கனிமொழி, கருணாநிதியின் மகள் என்ற முறையில் மட்டும் இந்த இயக்கத்தில் பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளதோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப் போனால் நாட்டுப் புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும் புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக பொறுத்துக் கொள்ள முடியாமல் சகித்து கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

கனிமொழி தயக்கம்: இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்பட கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலேயே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்து வந்தேன். அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல- கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்துவிடாமல் பாதுகாப்பதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்றபாடு எனக்குத்தான் தெரியும். நான் மூன்று நாள்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களைப் பெரிதுபடுத்தி நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கருணாநிதி பேசினார்

புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை

ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.

 SLA_war_crime_on_LTTE_Ramesh
எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தப்பிய மனைவி.. சிக்கிய மகள்?

தப்பிய மனைவி.. சிக்கிய மகள்? PDF அச்சிடுக மின்-அஞ்சல்
வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011 16:55
ழுகார் உள்ளே நுழையும்போது, நம் மேஜையில் 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் கிடந்தது.
'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்

என்கிற பெயரால், முக்கியக் கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு திட்டம்’ என்று அதில் தலைப்புச் செய்தி. தேர்தல் ஆணையத்துக்கு, அ.தி.மு.க. சார்பில் தரப்பட்ட மனுவின் சாராம்சம் அதுதான். அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு நம் முகத்தைப் பார்த்தார் கழுகார்! 
 'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்
என்கிற பெயரால், முக்கியக் கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு திட்டம்’ என்று அதில் தலைப்புச் செய்தி. தேர்தல் ஆணையத்துக்கு, அ.தி.மு.க. சார்பில் தரப்பட்ட மனுவின் சாராம்சம் அதுதான். அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு நம் முகத்தைப் பார்த்தார் கழுகார்! 

ழுகார் உள்ளே நுழையும்போது, நம் மேஜையில் 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் கிடந்தது.

'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்
என்கிற பெயரால், முக்கியக் கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு திட்டம்’ என்று அதில் தலைப்புச் செய்தி. தேர்தல் ஆணையத்துக்கு, அ.தி.மு.க. சார்பில் தரப்பட்ட மனுவின் சாராம்சம் அதுதான். அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு நம் முகத்தைப் பார்த்தார் கழுகார்!
''எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் வந்தது இல்லை! 'தமிழ்நாட்டுக்கு எது உண்மையான தலைமைச் செயலகம்?’ என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தையும் சட்டசபையையும் மாற்றி, அண்ணா சாலையில் அமைத்து இருக்கிறார் கருணாநிதி. 'நான் புதிய தலைமைச் செயலகத்தில் காலடிவைக்க மாட்டேன்’ என்று சபதம் போட்டுள்ளார் ஜெயலலிதா. 'அடுத்து வரப்போகும் ஆட்சி... தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்று முடிவான பிறகுதான் இந்தக் கட்டடங்களுக்கு உண்மையான மரியாதை மீண்டும் பிறக்கும்!''
''ஏதோ, 'கோப்புகளைக் காணாமல் அடிக்கிறார்கள்’ என்கிறாரே ஜெயலலிதா?''
''கோப்புகளை இட மாற்றம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 'பிப்ரவரி 24-ம் தேதிக்குள், கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு முழுமையாக அனைத்துத் துறைகளையும் மாற்றிவிட வேண்டும்’ என்று கருணாநிதி உத்தரவிட்டார். ஆனால், அப்படி முடியவில்லை. மார்ச் 1-ம் தேதி தேர்தல் தேதி அறிவித்ததால், பணிகள் அப்படியே முடக்கப்பட்டன. இப்போது விதிமுறைகள் தளர்த்தப்பட, கோப்புகளை மீண்டும் இட மாற்றம் செய்ய அதிகாரிகள் முயன்றார்கள். இதைக் கேள்விப்பட்டுத்தான் ஜெயலலிதா கொந்தளித்தாராம்.''
''ம்...''
''தொழில், பொதுப் பணி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், பொது ஆகிய ஐந்து துறை தொடர்பான ஆவணங்​களையே அதிரடியாக மாற்றி இருக்​கிறார்கள். பணியாளர் நலன், சட்டம், வருவாய்த் துறையின் சில பகுதிகள், நிதி ஆகியவை பழைய கட்டடத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு கொண்டு செல்ல நாமக்கல் மாளிகைக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. 'புதிய ஆட்சி வந்துதான் இந்த முடிவுகளை எடுக்க முடியும்’ என்கிறார் ஜெயலலிதா. கருணாநிதி, புதிய தலைமைச் செயலகத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து, அழகூட்டிக் கட்டியவர். ஆதங்கத்தில் அவர் முகமே மாறிவிட்டது. 'இந்தக் கட்டடத்தை சும்மா போட்டுவிடுவாரா அவர்?’ என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாராம். பழைய கோட்டையை அப்படியே தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்து​விடுவது என்பதே  கருணாநிதியின் திட்டம். அதற்கு ஜெயலலிதா போட்ட தடையைப் பொறுக்க முடியாமல், திங்கள்கிழமை காலை புதிய தலைமைச் செயலகத்துக்கே கருணாநிதி கிளம்பி வந்தார்!''
''அவர் புதிய தலைமைச் செயலகத்துக்கு வருவது ஒன்றும் புதிது இல்லையே?''
''சில நாட்களாக அவர் வராமல் இருந்தார். 'அங்க போய் என்னய்யா பண்றது? எதையும் பண்ணக் கூடாதுன்னுதான் தேர்தல் கமிஷன் சொல்லுதே?’ என்று கோபப்பட்டாராம். ஆனால், ஜெயலலிதா அறிக்கையைப் பார்த்ததும், ஆவேசம் அடைந்தவராக புதிய தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். ஆறாவது மாடியில், கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் பத்திரிகையாளர்களை வரச் சொல்லிச் சந்தித்தார். 'இது காபந்து சர்க்கார் அல்ல. தொடர்ச்சியான அரசுதான். தேர்தல் முடிவு வந்த பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை இருக்கும் அரசுக்கே காபந்து சர்க்கார் என்று பெயர்’ என்று தத்துவார்த்த விளக்கம் கொடுத்த கருணாநிதி முகத்தில் சோகம் தென்பட்டது. '2ஜி வழக்குத் தொடர்பான இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறது. அதில் கனிமொழி, தயாளு அம்மாள் இருவரும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்’ என்ற தகவல்தான் கருணாநிதியைச் சோர்வடைய வைத்தது!''
''தயாளு அம்மாள் பெயர் அதில் இடம் பெற​வில்லையே?''
''கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தபோது, குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகவில்லை. 'தயாளு, கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?’ என்று ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்... கருணாநிதி கொந்தளித்தார். 'சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள். நீயுமாம்மா?’ என்றாராம். ஆனால், அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டபோது, 'பெண்ணாக இருந்துகொண்டு இது மாதிரிப் பேசக் கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேசக் கூடாது’ என்று கனிவாக மாற்றப்​பட்டது.''
''இதயம் இல்லாத பெண் என்று யாரை கருணாநிதி சொல்கிறார்?''
''குற்றப் பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகிய இருவர் பெயரையும் சேர்க்க வேண்டாம் என்று இறுதி வரைக்கும் தி.மு.க. மன்றாடியதாம். 'தேர்தல் முடிவு வரும் வரைக்காவது தள்ளிவையுங்கள்’ என்றும் சொல்லப்பட்டதாம். 'வாக்குப் பதிவு நடக்கும் வரை தள்ளிவைக்கச் சொன்னதால், கனிமொழி, தயாளு பெயரைச் சேர்க்கவில்லை. இப்போது, மீண்டும் தள்ளிவைக்கச் சொல்வது நல்லது அல்ல’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சினம் கொண்டார்களாம். 'காமன் வெல்த் ஊழலில் சம்பந்தப்பட்ட கல்மாடியைக் கைது செய்யாமல் ஆ.ராசாவைக் கைது செய்தீர்கள். இப்போது என் மனைவி, மகளையும் கைது செய்வீர்களா? தி.மு.க-வுக்கு மட்டும் ஓரவஞ்சனையா?’ என்று கேட்டாராம் கருணாநிதி''
''இந்தத் தகவலை டெல்லிக்குக் கொண்டுசென்றது யார்?''
''மூன்று நாட்களுக்கு முன்னதாக டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். பிரதமரையும், பிரணாப் முகர்ஜி​யையும் சந்தித்தார். கருணாநிதியின் கோபத்தை, முழுமையாக பாலு கொட்டினாராம். 'உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கும் வழக்கு என்பதால், எங்களால் ஓர் அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாது. யாரையும் காப்பாற்ற முடியாது’ என்று சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்பட்டதையே, காங்கிரஸ் மேலிடம் தனது பதிலாகச் சொன்னது. கருணாநிதிக்கு பதில் சொல்வது மாதிரியே காலையில் சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தனர். மதியம் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைச் சேர்த்தார்கள்.''
''தயாளு அம்மாள்தான் விடுபட்டுள்ளாரே?''
''அவரைப் பொறுத்தவரையில், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இரண்டுவிதமான கருத்துகள் இருந்தனவாம். 'எனக்கு எதுவும் தெரியாது. சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டேன். நீங்க சொல்ற போர்டு மீட்டிங்குல இதுவரைக்கும் கலந்துகிட்டதுகூட கிடையாது’ என்பதை உண்மையான வார்த்தைகளாக சில அதிகாரிகள் நம்ப... 'அவரது வயதைக் காரணமாகச் சொல்லலாம்’ என்று சி.பி.ஐ. வக்கீல்கள் ஆலோசனை சொன்னார்கள். இதைவைத்தே தயாளு பெயர் நீக்கப்​பட்டதாகத் தகவல்!''
''இந்தச் செய்தி பரவியபோது, கருணாநிதி எங்கே இருந்தார்?''
''சி.ஐ.டி. காலனி வீட்டில்! ராஜாத்தி அம்மாள், கனிமொழி இருவரும் உடன் இருந்தனர். 'உடனே, மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரையும் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என்று கருணாநிதி கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 'அமைதியாக முடிவெடுங்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யோசிக்கலாம்’ என்று ஸ்டாலின் சமாதானப்​படுத்தினாராம். அதற்குள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூவர் அணி வந்துவிட்டது. 'வக்கீல்​களின் ஆலோசனையை வாங்குங்கள்’ என்று கருணாநிதி சொல்லி ஒரு மணி நேரம் கடந்தது. உடனேயே, டெல்லியில் இருந்து அடுத்த தகவல்... 'மே 6-ம் தேதி கனிமொழி ஆஜராக வேண்டும்’ என்று! 'அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’ என்று பதறினாராம் ராஜாத்தி.''
''என்ன ஆகும்?''
'' 'குற்ற உடந்தை’ என்ற கடுமையான வார்த்தையைக் கனிமொழி மீது சி.பி.ஐ. பயன்படுத்தி உள்ளது. சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு, ஆ.ராசாவைப்போலவே பல மாதங்கள் ஆகலாம். கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது. ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிகை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.க-வும் தயாராகி விட்டது. வரும் 27-ந்தேதி உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது தி.மு.க. காங்கிரசுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முரண்பட்ட தி.மு.க. கடந்த மார்ச் 4-ந்தேதி தான் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி 'செக்’ வைத்து பின்வாங்கியது. ஒன்னறை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது'' என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்! 
ழுகார் உள்ளே நுழையும்போது, நம் மேஜையில் 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் கிடந்தது.

Popular Posts

ithanal

About Me

வணக்கம் வாசகர்களே ! நம்ம சாமக்கோடாங்கி அப்பப்ப நாட்டுல நடக்கிற நல்லது கெட்டதெல்லாம் சொல்லுவாறு... அதுக்கு நீங்களும் ஒத்துழைக்கனும். உங்களுடைய கருத்துக்களயும் உங்களுக்கு தெரிஞ்ச விசயத்தையும் எழுதுங்க...
Powered by Blogger.. Powered by Blogger.