| திங்கட்கிழமை, 02 மே 2011 |
| 1991-1996 அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, காங்கிரஸ், பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என்று பலத்த கோரிக்கை எழுப்பினர். இதற்கு சட்டசபையில் பதிலளித்த, ஜெயலலிதா, சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்து வந்ததா என்று கேட்டார். கேட்டதோடு நில்லாமல், சிபிஐ ஒன்றும் தவறே செய்யாத ஒரு அமைப்பு அல்ல என்றும் கூறினார். இன்றைக்கு, உச்ச நீதிமன்றமே, சிபிஐ மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று நற்சான்று அளித்துள்ளது. நாடே மிக ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில், சிபிஐ இரண்டு குற்றப் பத்திரிக்கைளை தாக்கல் செய்துள்ளது. இந்தஇரண்டு குற்றப் பத்திரிக்கைகளிலும், சிபிஐ சரியான முறையிலும், நேர்மையான முறையிலும் செயல்பட்டிருக்கிறதா என்பதை வைத்தே, சிபிஐ யின் பாரபட்சமற்றஅணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும். சிபிஐ யின் முதல் குற்றப் பத்திரிக்கையை எடுத்துக் கொள்வோம். இந்தக் குற்றப்பத்திரிக்கையின் படி, ஸ்பெக்ட்ரம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கானகடைசித் தேதியை 25.09.2007 என ராசா மாற்றியதே கூட்டுச் சதித் திட்டத்தின் வெளிப்பாடுஎன்று தெரிவிக்கிறது. இவ்வாறு 25.09.2007 என்பதை கடைசித் தேதியாக மாற்றியதனால் தான், ஸ்வான் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் பயன் பெற முடிந்தது என்று சிபிஐ தெரிவிக்கிறது. இவ்வாறு கடைசித் தேதியை தன்னிச்சையாக ராசா மாற்ற முயற்சிஎடுத்ததற்கு, தொலைத் தொடர் புத்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், அந்த எதிர்ப்புகளை யெல்லாம் மீறித் தான் ராசா, தனது சதித்திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்று சிபிஐ தெரிவிக்கிறது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கருத்தை பெறவேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கோப்பில் எழுதியதை தொடர்ந்து,கோப்பு நீதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் படுகிறது. நீதித்துறை அமைச்சகம், இந்தமுடிவை ஒரு அமைச்சர் எடுப்பதற்கு பதிலாக, ஒரு அமைச்சரவை குழு எடுக்கலாம் என பரிந்துரைக்கிறது. இந்த நிலையில், சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆ.ராசா, 02.11.2011 அன்று, மன்மோகனுக்குஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், நீதித்துறை அமைச்சகம், ‘ஓவராக பேசுகிறது’ அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏராளமானோர், ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பித்திருப்பதால், உடனடியாக ஸ்பெக்ட்ரம் வழங்க வேண்டும் என்று எழுதுகிறார். அந்தக் கடிதம் பிரதமரைச் சென்றடையும் முன்பாகவே, அதே நாளில் 02.11.2007 அன்றே மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “ஏராளமானோர், ஸ்பெக்ட்ரம் வேண்டி, விண்ணப்பித்திருப்பதால், எவ்வளவு ஸ்பெக்ட்ரம் இருக்கிறது என்பதை கவனமாக பரிசீலிக்கவும், ஸ்பெக்ட்ரம் வழங்காமல் வெறும் லைசென்ஸ் மட்டும் வழங்கு வதால் யாருக்கும் பயன் இல்லை” என்று எழுதுகிறார். அன்று இரவே, மன்மோகனுக்கு ராசா பதில் எழுதுகிறார். எந்த விதிமுறைகளையும் மீறாமலே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதனால், விதிமீறல் இல்லாமலே முடிவெடுக்கப் படும் என்று எழுதுகிறார். ராசா கடிதம் எழுதிய 02.11.2007 அன்றே, அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பாகவே மன்மோகன் ராசாவுக்கு எப்படி கடிதம் எழுதுகிறார். ராசா தன்னை இந்த விவகாரத்தில் கோர்த்து விடப் பார்க்கிறார், அதனால் நாம் முந்திக் கொள்வோம் என்று மன்மோகன் இப்படி கடிதம் எழுதினாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மன்மோகன் ராசாவுக்கு எழுதிய கடிதம் எப்போது தயார் செய்யப் பட்டது, இவ்வாறு கடிதம் எழுத வேண்டும் என்ற உத்தரவு யாரால் வழங்கப் பட்டது, நேரடியாக ராசாவை அழைத்து விவாதிக்காமல், இப்படி கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன, என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டியது மன்மோகன் அல்லவா ? மன்மோகன் சிங்கின் செயலாளர், அந்தரங்க காரியதரிசி, பிரதமர் அலுவலகத்தில் இந்த கடிதத்தை தயார் செய்தவர் என்று அத்தனை பேரையும் அல்லவா சாட்சியாக விசாரிக்க வேண்டும் ? மன்மோகனை ஏன் சிபிஐ விசாரிக்கவில்லை ? மன்மோகனின் கீழ் சிபிஐ பணியாற்றுவதாலா ? இது மட்டும் அல்ல. இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கும் போது, ராசாவின் தீய நோக்கத்துக்கு மற்றொரு தடை, வருகிறது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையை பின்பற்றினாலும், ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு முன்பாக விண்ணப்பம் வழங்கிய நிறுவனங்களும் இருப்பதால், அந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வழங்க ஏதுவாக, ஒரு மணி நேரத்திற்குள் மொத்த கட்டணத்திற்கான வரைவோலையை (டிமான்ட் ட்ராப்ட்) வழங்க வேண்டும் என்ற விதிமுறையில் ராசா திருத்தம் கொண்டு வருகிறார். இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த, தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், இவ்வாறு விதிமுறையை மாற்ற இயலாது என்று கோப்பிலேயே எழுதி விடுகிறார்கள். இவ்வாறு கோப்பிலேயே பதிவு செய்தது, ராசாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கோப்பில் எழுதியதை எப்படி அழிக்க முடியும் ? இதை மீறுவதற்கு ராசா கையாண்ட தந்திரம், மன்மோகனுக்கு மீண்டும் ஒரு கடிதம். அந்தக் கடிதத்தில், விண்ணப்பங்கள் ஏராளமாக வந்துள்ளன. நேரமோ மிகக் குறைவாக இருக்கிறது (எதுக்கு துட்டு வாங்கவா ?) அதனால் நான் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, உடனடியாக ஸ்பெக்ட்ரம் வழங்குவதென முடிவெடுத்து விட்டேன்…. என்று கடிதம் எழுதுகிறார். மன்மோகன் பிரதமரா, ராசா பிரதமரா என்ற சந்தேகம் எழுகிறதல்லவா ? மன்மோகனுக்கு அது போன்ற சந்தேகமெல்லாம் இல்லை. நான் பிரதமராக இருக்க வேண்டுமே என்ற கவலை மட்டுமே. பிரதமருக்கு கீழ் பணியாற்றும், ஒரு அமைச்சர், நான் இப்படித் தான் செய்யப் போகிறேன் என்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் என்றால், அந்தக் கோப்பை என்னிடம் அனுப்புங்கள் என்றல்லவா மன்மோகன் உத்தரவிட்டிருக்க வேண்டும் ? அதை விடுத்து, மன்மோகன் என்ன செய்தார் தெரியுமா ? ராசாவுக்கு ஒரு பதில் கடிதம் எழுதுகிறார். இதுதான் மன்மோகன் எழுதிய கடிதம். ஒரு நபர், நான் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறேன் என்று மற்றொருவருக்கு கடிதம் எழுதுகிறார். கடிதத்தை பெற்றவர், உங்கள் கடிதம் வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு, அது போல ஒரு கொள்ளை உண்மையிலேயே நடந்தது என்றால், முன் கூட்டியே தகவல் பெற்ற நபரை கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றப் பத்திரிக்கையில் சேர்ப்பது தானே முறை ? ஆனால், மன்மோகனை சாட்சியாக கூட சிபிஐ விசாரிக்கவில்லை என்பதே, சிபிஐ யின் யோக்யதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அல்லவா ? அன்று மன்மோகன் தலையிட்டு, ராசாவை தடுத்திருந்தார் என்றால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியிருக்கும் தானே ? இன்று இந்த சிபிஐ விசாரணை, அதற்கு ஒரு செலவு என்று தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கான அவசியம் இல்லாமல் போயிருக்குமே ? இந்த நிலையில், சிபிஐ யின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய மன்மோகன், சிபிஐ, விருப்பு வெறுப்பின்றி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளது, சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ? இதோடு முடியவில்லை. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக குலாம் ஈ வானாவதி என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு வழக்கறிஞர் வேலையை தவிர, மற்ற எல்லா வேலைகளும் அத்துப் படி. அந்த நபரிடம், ராசா, இது போல, நான் விதிமுறைகளை மாற்றி ஒரே நாளில் மொத்த பணத்தையும், வரைவோலையாக கட்ட வேண்டும் என்ற உத்தரவிடப் போகிறேன் என்று எழுதுகிறார். அதற்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில், வானாவதி, “ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான கோப்புகளை நான் பார்த்து விட்டேன். ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான வழக்குககள் எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. எடுக்க உத்தேசித்திருக்கும் முடிவு நியாயமானதும், வெளிப்படையானதும் ஆகும். இது தொடர்பான பத்திரிக்கை குறிப்பு, அனைத்தையும் வெளிப்படையானதாக்கும். எல்லாம் சரியாக உள்ளது”. இதுதான் வானாவதி வழங்கிய கருத்துரை. இந்த நபர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட வேண்டுமா இல்லையா என்று சொல்லுங்கள். இந்த நபரும் சேர்க்கப் படவில்லை. இதை விட, சிபிஐ செய்துள்ள மிகப் பெரிய குளறுபடி ஒன்று உள்ளது. அது, மன்மோகனையும், வானாவதியையும் காப்பாற்றியதை விட, மிகப் பெரிய அயோக்கியத்தனமானது. ஆண்டிமுத்து ராசா மற்றும், யூனிடெக் நிறுவனம் மற்றும், ரிலையன்ஸ் (ஸ்வான்) ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டு தேசத்தில் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை கொள்ளையடித்ததாக குற்றச் சாட்டு. இவர்களுக்கு இணையாக இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்ட மற்றொரு நிறுவனம், டாடா. டாடா நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இரட்டை லைசென்ஸ் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் வழங்கப் படுகிறது. இரட்டை லைசென்ஸ் என்றால் என்னவென்றால், ஏற்கனவே லைசென்ஸ் பெற்று, சிடிஎம்ஏ தொழில் நுட்பத்திற்காக ஸ்பெக்ட்ரம், ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, ஜிஎஸ்எம் தொழில் நுட்பத்திலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது. ரிலையன்ஸ் மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது போல ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணபப்பித்திருந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய ராசா, ஜனவரி 2008ல் டாடா நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்குமே, 2001ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய விலையில் ஒதுக்குகிறார். இந்த ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. நிதித் துறை, தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் அதிகாரிகள், எழுத்து பூர்வமாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். ஆனால், ராசா, ‘போங்கடா வெண்ணைகளா’ என்று 2001 விலையான 1700 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். ரத்தன் டாடா என்ன செய்கிறார் தெரியுமா ? ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற உடன், டாடா டெலிசர்வீசஸின் 27 சதவிகித பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோ நவம்பர் 2007ல், ரத்தன் டாடா கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம், நீரா ராடியா மூலமாக, கருணாநிதியிடம் நேரடியாக கொடுக்கப் படுகிறது. (இளைஞன் படத்துல, நீரா ராடியாவ கருணாநிதி ஏன் ஹீரோயினா போடல ?. அவங்க கழக நீரோட்டத்துல இணைஞ்சிருந்தா, குஷ்பூவுக்கு இடம் இல்லாம போயிருக்குமா ?) அந்தக் கடிதத்தில், “இந்திய வரலாற்றில் தொலைத் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை. அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பு உங்கள் கட்சியிடம் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வையோடும், புதிய சிந்தனைப் போக்கோடும், நீங்களும் உங்கள் அமைச்சரும் இத்துறையில் அடைந்துள்ள வளர்ச்சியை பாராட்ட வேண்டியது வரலாற்றின் கடமை. தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சியை சீர்குலைக்க பல்வேறு சக்திகள் முயன்று வருகின்றன. அந்த பொய்யான தகவல்கள் குறித்த உண்மையை உங்களுக்கு விளக்குவதற்காக நீரா ராடியாவிடம் இக்கடிதத்தை நேரடியாக கொடுத்தனுப்புகிறேன்.” இந்தக் கடிதத்தை விட, கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ? இது வரை எந்த அமைச்சரையுமே பாராட்டாத ரத்தன் டாடா, எதற்காக தனிப்பட்ட முறையில் இப்படி ஒரு கடிதத்தை எழுத வேண்டும் ? இது மட்டுமல்ல. யூனிடெக் நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலிருந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற விலை 1700 கோடி ரூபாய். இந்த 1700 கோடி ரூபாயும், டாடா நிறுவனத்தால் வழங்கப் பட்டிருக்கிறது என்பது விசித்திரமான உண்மை. டாடா குழுமத்தின் டாடா ரியாலிட்டி நிறுவனத்தின் மூலமாக யூனிடெக் நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட 1700 கோடி ரூபாயையும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக யூனிடெக் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது, ஆதாரங்களோடு அம்பலப் பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஸ்வான் நிறுவனம் என்ற ஒன்றை உருவாக்கியதென்றால், டாடா நிறுவனம், ஏற்கனவே இருந்த யூனிடெக் நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரித்ததாகவே தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம் தனது பங்குகளை துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு விற்றது, யூனிடெக் நிறுவனம் தனது பங்குகளை நார்வேயின் டெலிநார் என்ற நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது என்று பட்டியலிடும், சிபிஐ, டாடா நிறுவனம், டோகோமோவுக்கு தனது பங்குகளை விற்று கொள்ளையோ கொள்ளை அடித்ததைப் பற்றி மூச்சு விடவில்லை. சிபிஐ வானத்திலிருந்து குதித்ததா என்ற கேள்வி சரியான கேள்வி தானே ? போபர்ஸ் விவகாரத்தில் சிபிஐ, செய்த அயோக்கியத் தனங்களை பார்த்திருக்கிறோம் தானே…. ? இது மட்டும் என்ன விதிவிலக்கா ? சிபிஐயில் பணியாற்றுபவர்களும் மனிதர்கள் தானே…. ? அவர்களுக்கும், ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், உயிர் பயம் எல்லாம் இருக்கும் தானே… ? சரி இவ்வளவு நேரம் சீரியசாகவே படித்து விட்டோம். கொஞ்சம் நகைச்சுவையை சுவைக்கலாமா. தான் எடுக்கும் முடிவுகள் குறித்து, மன்மோகனுக்கு கடிதம் எழுதிய ராசா, மற்ற விவகாரங்களுக்குப் பிறகு, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது. “இந்தத் துறையில் நான் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே, மக்களுக்கு குறைந்த விலையில் செல்போன் சேவையை வழங்குவதற்காகவும், கிராமப் புறங்களில் செல்போன் சேவையை விரிவுபடுத்துவதற்காகவுமே.” நன்றி சவுக்கு இணையம் |
'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்
| |
'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்
| |
'புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு அரசுத் துறைகள் மாற்றம்
| |
''எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் வந்தது இல்லை! 'தமிழ்நாட்டுக்கு எது உண்மையான தலைமைச் செயலகம்?’ என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தையும் சட்டசபையையும் மாற்றி, அண்ணா சாலையில் அமைத்து இருக்கிறார் கருணாநிதி. 'நான் புதிய தலைமைச் செயலகத்தில் காலடிவைக்க மாட்டேன்’ என்று சபதம் போட்டுள்ளார் ஜெயலலிதா. 'அடுத்து வரப்போகும் ஆட்சி... தி.மு.க-வா? அ.தி.மு.க-வா?’ என்று முடிவான பிறகுதான் இந்தக் கட்டடங்களுக்கு உண்மையான மரியாதை மீண்டும் பிறக்கும்!''
''ஏதோ, 'கோப்புகளைக் காணாமல் அடிக்கிறார்கள்’ என்கிறாரே ஜெயலலிதா?''
''கோப்புகளை இட மாற்றம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. 'பிப்ரவரி 24-ம் தேதிக்குள்,
''ம்...''
''தொழில், பொதுப் பணி, ஊரக வளர்ச்சி, சமூக நலன், பொது ஆகிய ஐந்து துறை தொடர்பான ஆவணங்களையே அதிரடியாக மாற்றி இருக்கிறார்கள். பணியாளர் நலன், சட்டம், வருவாய்த் துறையின் சில பகுதிகள், நிதி ஆகியவை பழைய கட்டடத்தில் இருந்து புதிய தலைமைச் செயலகத்துக்கு கொண்டு செல்ல நாமக்கல் மாளிகைக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. 'புதிய ஆட்சி வந்துதான் இந்த முடிவுகளை எடுக்க முடியும்’ என்கிறார் ஜெயலலிதா. கருணாநிதி, புதிய தலைமைச் செயலகத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து, அழகூட்டிக் கட்டியவர். ஆதங்கத்தில் அவர் முகமே மாறிவிட்டது. 'இந்தக் கட்டடத்தை சும்மா போட்டுவிடுவாரா அவர்?’ என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாராம். பழைய கோட்டையை அப்படியே தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைத்துவிடுவது என்பதே கருணாநிதியின் திட்டம். அதற்கு ஜெயலலிதா போட்ட தடையைப் பொறுக்க முடியாமல், திங்கள்கிழமை காலை புதிய தலைமைச் செயலகத்துக்கே கருணாநிதி கிளம்பி வந்தார்!''
''அவர் புதிய தலைமைச் செயலகத்துக்கு வருவது ஒன்றும் புதிது இல்லையே?''
''சில நாட்களாக அவர் வராமல் இருந்தார். 'அங்க போய் என்னய்யா பண்றது? எதையும் பண்ணக் கூடாதுன்னுதான் தேர்தல் கமிஷன் சொல்லுதே?’ என்று கோபப்பட்டாராம். ஆனால், ஜெயலலிதா அறிக்கையைப் பார்த்ததும், ஆவேசம் அடைந்தவராக புதிய தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். ஆறாவது மாடியில், கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் பத்திரிகையாளர்களை வரச் சொல்லிச் சந்தித்தார். 'இது காபந்து சர்க்கார் அல்ல. தொடர்ச்சியான அரசுதான். தேர்தல் முடிவு வந்த பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை இருக்கும் அரசுக்கே காபந்து சர்க்கார் என்று பெயர்’ என்று தத்துவார்த்த விளக்கம் கொடுத்த கருணாநிதி முகத்தில் சோகம் தென்பட்டது. '2ஜி வழக்குத் தொடர்பான இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறது. அதில் கனிமொழி, தயாளு அம்மாள் இருவரும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்’ என்ற தகவல்தான் கருணாநிதியைச் சோர்வடைய வைத்தது!''
''தயாளு அம்மாள் பெயர் அதில் இடம் பெறவில்லையே?''
''கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தபோது, குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகவில்லை. 'தயாளு, கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?’ என்று ஒரு பெண் நிருபர் கேட்டதுதான் தாமதம்... கருணாநிதி கொந்தளித்தார். 'சில பெண்கள் இதயம் இல்லாமல் இருக்கிறார்கள். நீயுமாம்மா?’ என்றாராம். ஆனால், அவருடைய பேட்டி டெக்ஸ்ட் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டபோது, 'பெண்ணாக இருந்துகொண்டு இது மாதிரிப் பேசக் கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேசக் கூடாது’ என்று கனிவாக மாற்றப்பட்டது.''
''இதயம் இல்லாத பெண் என்று யாரை கருணாநிதி சொல்கிறார்?''
''குற்றப் பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகிய இருவர் பெயரையும் சேர்க்க வேண்டாம் என்று இறுதி வரைக்கும் தி.மு.க. மன்றாடியதாம். 'தேர்தல் முடிவு வரும் வரைக்காவது தள்ளிவையுங்கள்’ என்றும் சொல்லப்பட்டதாம். 'வாக்குப் பதிவு நடக்கும் வரை தள்ளிவைக்கச் சொன்னதால், கனிமொழி, தயாளு பெயரைச் சேர்க்கவில்லை. இப்போது, மீண்டும் தள்ளிவைக்கச் சொல்வது நல்லது அல்ல’ என்று
''இந்தத் தகவலை டெல்லிக்குக் கொண்டுசென்றது யார்?''
''மூன்று நாட்களுக்கு முன்னதாக டி.ஆர்.பாலு டெல்லி சென்றார். பிரதமரையும், பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தார். கருணாநிதியின் கோபத்தை, முழுமையாக பாலு கொட்டினாராம். 'உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடக்கும் வழக்கு என்பதால், எங்களால் ஓர் அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாது. யாரையும் காப்பாற்ற முடியாது’ என்று சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்பட்டதையே, காங்கிரஸ் மேலிடம் தனது பதிலாகச் சொன்னது. கருணாநிதிக்கு பதில் சொல்வது மாதிரியே காலையில் சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தனர். மதியம் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைச் சேர்த்தார்கள்.''
''தயாளு அம்மாள்தான் விடுபட்டுள்ளாரே?''
''அவரைப் பொறுத்தவரையில், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் இரண்டுவிதமான கருத்துகள் இருந்தனவாம். 'எனக்கு எதுவும் தெரியாது. சரத்குமார் சொன்ன இடத்துல கையெழுத்துப் போட்டேன். நீங்க சொல்ற போர்டு மீட்டிங்குல இதுவரைக்கும் கலந்துகிட்டதுகூட கிடையாது’ என்பதை உண்மையான வார்த்தைகளாக சில அதிகாரிகள் நம்ப... 'அவரது வயதைக் காரணமாகச் சொல்லலாம்’ என்று சி.பி.ஐ. வக்கீல்கள் ஆலோசனை சொன்னார்கள். இதைவைத்தே தயாளு பெயர் நீக்கப்பட்டதாகத் தகவல்!''
''இந்தச் செய்தி பரவியபோது, கருணாநிதி எங்கே இருந்தார்?''
''சி.ஐ.டி. காலனி வீட்டில்! ராஜாத்தி அம்மாள், கனிமொழி இருவரும் உடன் இருந்தனர். 'உடனே, மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரையும் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என்று கருணாநிதி கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள். 'அமைதியாக முடிவெடுங்கள். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு யோசிக்கலாம்’ என்று ஸ்டாலின் சமாதானப்படுத்தினாராம். அதற்குள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூவர் அணி வந்துவிட்டது. 'வக்கீல்களின் ஆலோசனையை வாங்குங்கள்’ என்று கருணாநிதி சொல்லி ஒரு மணி நேரம் கடந்தது. உடனேயே, டெல்லியில் இருந்து அடுத்த தகவல்... 'மே 6-ம் தேதி கனிமொழி ஆஜராக வேண்டும்’ என்று! 'அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’ என்று பதறினாராம் ராஜாத்தி.''
''என்ன ஆகும்?''
'' 'குற்ற உடந்தை’ என்ற கடுமையான வார்த்தையைக் கனிமொழி மீது சி.பி.ஐ. பயன்படுத்தி உள்ளது. சிக்கலில் இருந்து அவர் விடுபடுவதற்கு, ஆ.ராசாவைப்போலவே பல மாதங்கள் ஆகலாம். கருணாநிதிக்கு வைக்கப்படும் ஆசிட் டெஸ்ட் இது என்று டெல்லி மீடியா வட்டாரம் பரபரக்கிறது. ஆனாலும் 2ஜி குற்றப்பத்திரிகை விவகாரத்தை எதிர்கொள்ள தி.மு.க-வும் தயாராகி விட்டது. வரும் 27-ந்தேதி உயர்மட்ட செயல்திட்டக் குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியிருக்கிறது தி.மு.க. காங்கிரசுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முரண்பட்ட தி.மு.க. கடந்த மார்ச் 4-ந்தேதி தான் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி 'செக்’ வைத்து பின்வாங்கியது. ஒன்னறை மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது'' என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்!
க ழுகார் உள்ளே நுழையும்போது, நம் மேஜையில் 'நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் கிடந்தது.





உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்